மிசோராம் சட்டபேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
இதேபோல் மிசோராம் மாநிலத்திலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளி வைக்கப்படுவதாக அதாவது டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டிச. 3ஆம் தேதி மிசோரம் மக்களின் பண்டிகை தினம் என்பதால், தேதியை மாற்றக்கோரி பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்ததால் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 7 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தம் 80.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.