சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் 135 வெற்றியுடன் 2 ஆம் இடத்திலும், நியூசிலாந்து 102 வெற்றியுடன் 3 ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தலா 95 வெற்றியுடன் 4வது இடத்திலும் உள்ளன.