கடற்படை தினம் 2023: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள்  மரியாதை!
Sep 13, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படை தினம் 2023: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள்  மரியாதை!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 07:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடற்படை தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமைத் தளபதி விஆர் சௌத்ரி மற்றும் கடற்படைத் தளபதி ஆர் ஹரிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

1971-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, டிசம்பர் 4 -ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள், துணிச்சலாக நுழைந்த இந்தியக் கடற்படையினர், பாகிஸ்தானின் போர்கப்பல்களைத் தாக்கி அழித்தனர்.  ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்று அழைக்கப்பட்ட இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானின் முக்கிய போர்கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 -ஆம் தேதி ‘இந்திய கடற்படை தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களும் நினைவுகூறப்படுகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற சிந்துதுர் கோட்டையில், கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமான கடற்படை செயல் விளக்கம் 2023, டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கடற்படை தலைமைத் தளபதி ஆர். ஹரிகுமார் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை, மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், இராணுவப் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். இந்த நிகழ்வு நமது வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுவதையும், பெருமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜாவால் 1660-ல் கட்டப்பட்ட சிந்துதுர் கோட்டை இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைப் பெருமைப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் அதிநவீன கப்பல்கள், விமானங்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் 20 போர்க்கப்பல்கள், மிக் 29 கே, எல்.சி.ஏ உள்ளிட்ட 40 விமானங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், இந்தியக் கடற்படையின்  கடல்சார் கமாண்டோக்களின் கடற்கரை கண்காணிப்பு மற்றும் தாக்குதல் செயல் விளக்கம் ஆகியவை நடைபெற உள்ளது.

Tags: NavyIndianNavyDayNavyDay2023IndianNavyDay 2023
Share
Tweet
SendShare
Previous Post

மணிப்பூரில் புதிய தொடக்கம் ஆரம்பமாகி உள்ளது !

Next Post

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய சாதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies