நடிகர், நடிகைகள் குத்தாட்டம் போடுவது சாதாரணம். ஆனால், ஒரு அமைச்சர், கட்சி நிகழ்ச்சி, தேர்தல் களம் என சமயம் கிடைக்கும் போது எல்லாம் புதிய அவதாரம் எடுத்து டான்ஸ் ஆடுவது வாடிக்கையாக உள்ளது. அவர் வேறு யாருமல்ல, விழுப்புரத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடிதான்.
மக்களும், கட்சியினரும் கடும் அதிருப்பதியில் உள்ள நிலையில், செம்மண் குவாரி ஊழல், முறைகேடு வழக்கில் சிக்கி நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி சின்னாபின்னமாகி வருகிறார்.
போதா குறைக்குச் சென்னை அமலாக்கத்துறையில் விருந்தாளி போல் அடிக்கடி ஆஜராகி வரும் பொன்முடி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அமலாக்கத்துறை படிக்கட்டு ஏறியபோது “ஏதோ” நடக்கப்போகிறது என திமுகவினரே திகில் கிளப்பினர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி பெண்களுடன் உற்சாகமாக நடனம் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
வரும் 4-ம் தேதி புயல் வருகிறது, கனமழை வருகிறது என நாடே அல்லல்பட்டு வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி மட்டும் பெண்களுடன் டான்ஸ் ஆடியது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.