மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய நாளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார். மேலும் மழை பாதிப்புகளை ஹெலிகாப்டரில் மூலம் ராஜ்நாத் சிங் ஆய்வுமேற்கொள்கிறார்.
சென்னையை விட்டு மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமுன் அகலவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில், சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பக்கமும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். ஹெலிகாப்டரில் அவர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலினை அவர் சந்திக்கிறார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
Our Hon PM Thiru @narendramodi avl is with the people of TN always & especially during the testing times.
Our Hon Defence Minister Thiru @rajnathsingh avl will be in Chennai tomorrow to assess the flood situation caused due to the #Michaungcyclone. @Murugan_MoS
— K.Annamalai (@annamalai_k) December 6, 2023
நமது பிரதமர் நரேந்திர மோடி சோதனை காலங்களில் தமிழக மக்களுடன் இருக்கிறார்.
நமது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்காக நாளை சென்னை வர உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.