உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் நீதிமன்ற காவல் 12வது முறையாக நீட்டிக்கப்பட்டு வந்தது. அவரின் நீதிமன்ற காவலை 15ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை முடிவடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
















