சென்னை சென்ட்ரல் – விஜயவாடா உட்பட 92 விரைவு இரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக, தெற்கு மத்திய இரயில்வே தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் – விஜயவாடா இடையே, இரயில் பாதை மேம்பாட்டு பணிகள், வரும் 8-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடக்க உள்ளன.
இதனால், இந்த வழித்தடத்தில் விரைவு இரயில்களின் சேவை, பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – சந்திரகாச்சி, சென்ட்ரல் – விசாகபட்டினம், சென்ட்ரல் – விஜயவாடா, தாம்பரம் – சந்திரகாச்சி உட்பட, 92 விரைவு இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, நான்கு இரயில்களின் சேவையில், ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.