தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை நின்ற பிறகும், வெள்ளம் பாதித்த பல இடங்களில் தண்ணீா் வடியவில்லை, மின்சாரம், தண்ணீா் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
முதல்வர் ஸ்டாலின் 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்கி கூறி, தமிழகத்திற்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.