உத்தரமேரூர் மருதம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவி
உத்தரமேரூர் மருதம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு பாஜக-சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில்தொடர் மழையின் காரணமாக மருதம் கிராமத்தில், கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில், உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய -பாஜக சார்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
அப்போது பழங்குடியின மக்களிடம் உத்தரமேரூர் தொகுதி பொறுப்பாளர் செல்வம் பேசினார். இது போன்ற பேரிடர் காலங்களில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பழங்குடியின குடும்பங்களை நேரில் சந்தித்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார். மழையால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பாஜக எந்நேரமும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.