ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோர்கான 10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் தொடங்கியது. முதல் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் :
நசீர் கான் மரூப்கில், கலீல் அகமது, பஷீர் அகமது, வஹிதுல்லாஹ் சத்ரன், முகமது யூனுஸ், நுமன் ஷா, ரஹிமுல்லா சுர்மதி, சோஹில் கான், அல்லா கசன்ஃபர், காலித் தனிவால் , வஃபியுல்லா தாரகில் , ஜம்ஷித் சத்ரன், ஃபரிதூன் தாவூத்சாய், அக்ரம் முகமதுசாய்
இந்தியா அணி வீரர்கள் :
அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன், ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே , முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (WK), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.