கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிடில இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 வது சுற்று போட்டி நடைபெற்றது. இந்திய வீரர் சமீர் வர்மா, இந்தோனேசிய வீரர் ஆல்வி விஜயா சாய்ருல்லாவுடன் மோதினார்.
இதில் இந்திய வீரர் சமீர் வர்மா 22-24, 21-18, 21-23 என்ற செட் கணக்கில் ஆல்வி விஜயா சாய்ருல்லாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அதேபோல் மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல் தேசிய சாம்பியன் மிதுன் மஞ்சுநாத் 19-21, 19-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோக்விடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னாதி ஹூடா 21-11, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சுங் ஷோ யூனிடம் தோல்வியடைந்தார்.