அயுத்தயா மற்றும் அயோத்தி, நாடுகளால் பிரிக்கப்பட்டாலும், பகவான் ராமரால் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுத்தயா என இரண்டு நகரங்களும் வெவ்வேறு நாடுகளில் சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இந்த இரு நாடுகளையும் , இரு நாடு மக்களையும் இணைப்பது இந்த இரு நகரில் உள்ள ராமர் கோவில் தான்.
சியான் ( தாய்லாந்து ) இராச்சியம் 13 ஆம் நூற்றாண்டின் பாதியில் நிறுவப்பட்டது. பாங்காக்கிலிருந்து வடக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அயுத்தயா , சியாம் இராச்சியத்தின் மிக முக்கியமான நகரமாக மாறியது.
அயுத்தயா என்ற சொல் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற வார்த்தையின் வேர்ச் சொல்லாக உள்ளது. அதேபோல் அயுத்தயா என்பது ஹிந்து மதத்தின் சொல்லாகவும் உள்ளது.
13 ஆம் நூற்றாண்டின் பாதியில் அயுத்தயா நகரத்திற்கு இப்பெயரை வைத்தவர் அப்போதைய அரசர் ராமதிபோடி ஆவார். மேலும் இவரின் பெயரும் ராமாயணத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.
அரச சடங்குகள் இந்து வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ராமரால் உருவகப்படுத்தப்பட்ட சித்தாந்தத்தை அரச குடும்பம் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சியாமில் ஆட்சி செய்த சக்கிரி வம்சத்தை நிறுவிய மன்னர் முதலாம் ராமா, 1782 இல் அரியணை ஏறியபோது, அயுத்யா இராச்சியத்தை நிறுவியதைப் போலவே ராமதிபோடி என்ற பெயரையும் பெற்றார். அப்போது முதல் தாய்லாந்தின் அனைத்து மன்னர்களும் தங்கள் பெயருடன் ராமா என்ற பெயரைப் புனை பெயராகக் கொண்டனர்.
மேலும் ராமாயணம் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பௌத்தர்களால் கொண்டுவரப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் அயுத்தயா இராச்சியத்தின் போது ராமாயணம் தாய்லாந்து பதிப்பில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அங்கீகரிக்கப்பட்ட ராமாகியவனின் முதல் பாதிப்பை மன்னார் முதலாம் ராமா தொகுத்தார் என்று கூறப்படுகிறது. உண்மையில், பகவான் ராமர் தாய்லாந்து கலாச்சாரத்தில் மிகவும் வேரூன்றியவர்.