சென்னையில் புயல் தாக்கிய 3 நாட்களில் 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. இதனையடுத்து மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டது. சென்னை காரிஸன் பட்டாலியன் வீரர்கள் உடனடியாக களம் இறக்கப்பட்டனர்.
தண்ணீர் தத்தளித்த மணப்பாக்கம், முகலிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம்,பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் ராணுவ வீரர்கள் விரைவாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
முதியவர்கள், குழந்தைகள், அவர்களின் பெற்றோர், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை கொடுத்து மீட்பு பணி நடைபெற்றது. பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட அசாத்திய துணிச்சலுடன் செயல்பட்ட ராணுவ வீரர்கள், வெள்ளத்தில் சிக்கித்தவித்தவர்கள் படகு மூலம் மீட்டனர். இந்நிலையில் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை 3 நாட்களில் 3500 பேர் மீட்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.