மாற்றுத்திறனாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது, அவர்கள் அறிவு, திறமை, விருப்பம், நிபுணத்துவம் ஆகியவற்றின் களஞ்சியங்கள் எனக் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
குருகிராமில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 10-வதுதேசிய மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,
ஒரு காலத்தில் பெண்கள் கடினமான பணிகளைச் செய்ய இயலாதவர்களாகக் கருதும் சமூகக் கருத்துக்களின் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைத்தார்.
மாற்றுத் திறனாளிகளை அனுதாபமாகக் கருதாமல், அறிவுச் செல்வம், திறமை, விருப்பம் மற்றும் நிபுணத்துவத்திற்கான அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்களாக அவர்கள் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அபரிமிதமான திறமைகளைக் கொண்ட நமது மாற்றுத்திறாளிகளுக்கு அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
டிஸ்லெக்ஸியா நோயால் பாதிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி உதாரணமாகக் குறிப்பிட்ட திரு தங்கர், குறைபாடுகள் குறித்த நமது பார்வை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் விஷயங்களைப் பொறுத்தது என்பதை எடுத்துக்காட்டினார்.
எவ்வாறாயினும், உண்மையான இயலாமை என்பது கண்களால் பார்ப்பதை விடவும் அதிகமானவற்றை உள்ளடக்கியது, என்றார். மேலும் மன, ஆன்மீக மற்றும் உணர்ச்சி சவால்களின் எல்லைகளுக்கு விரிவடைகிறது என்று கூறினார்.
அனைத்து வகையான குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, அதற்கு பொருத்தமான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பல்வேறு துறைகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் “அவர்களின் முன்னேற்றத்துக்கான தடைகள் தகர்க்கப்பட்டுள்ளன” என்றும் “மாற்றுத்திறனாளிகள்” என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் குறித்த கண்ணோட்டத்தில் இதேபோன்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல; அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கருதுகிறோம், “என்று அவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படையாக உடல் திறன் கொண்டவர்களாகத் தோன்றுபவர்கள், கண்ணுக்குத் தெரிந்தோ அல்லது மறைக்கப்பட்டோ ஒருவித இயலாமையைக் கொண்டிருக்கலாம், யாரும் உண்மையில் முழுமையானவர்கள் அல்ல என்று அவர் விவரித்தார்.
“ஒருவரின் கட்டுப்பாட்டில் அல்லது செல்வாக்கின் கீழ் இருப்பது” என்ற சமீபத்திய போக்குக்கு எதிராக எச்சரித்தவர், அதிகாரமளிப்பதை விட சார்புநிலையை வளர்ப்பதற்கான ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினரிடையே அதிகாரமளிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர், சமூகத்தின் இந்த பிரிவுகளுக்கு அதிகாரமளிப்பதை நோக்கி முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வசுதைவ குடும்பகம் என்ற இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் ஜி-20 குறிக்கோள் இப்போது ஒரு கள யதார்த்தமாக உள்ளது என்பதை வலியுறுத்தியவர், இந்தியாவைப் பற்றிய உலகின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
தீர்வுகளுக்காக மேற்கத்திய நாடுகளை மட்டுமே நோக்குவதை விட்டு வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், இப்போது, மேற்கத்திய நாடுகள் இந்தியாவிடமிருந்து நுண்ணறிவுகளை எதிர்பார்க்கின்றன என்று குறிப்பிட்டார்.
இன்று உலக அரங்கில் இந்தியாவின் முக்கிய இடத்தை எடுத்துரைத்த அவர், “நாட்டின் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி உலகை வியக்க வைத்துள்ளது” என்று எடுத்துரைத்தார்.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதை பாராட்டியவர், அதன் முழுமையான விதிகள் குறித்து திருப்தி தெரிவித்தார். கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வசதிகளை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையைப் பாராட்டியவர், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த “சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கொண்டு புதுமையாக இருக்க வேண்டியதன்” முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். “ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும்”, என்று வலியுறுத்தினார்.
சர்தக் உலகளாவிய வள மையத்தில் உள்ள திறன் அருங்காட்சியகம் ‘சாத்தியக்கூறுகளின் அருங்காட்சியகம்’ ஆகியவற்றையும் குடியரசுத் துணைத்தலைவர் பார்வையிட்டார்.