மாற்றுத்திறனாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது! - குடியரசுத் துணைத்தலைவர்
Sep 13, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது! – குடியரசுத் துணைத்தலைவர்

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 04:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாற்றுத்திறனாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது, அவர்கள் அறிவு, திறமை, விருப்பம், நிபுணத்துவம் ஆகியவற்றின் களஞ்சியங்கள் எனக் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

குருகிராமில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 10-வதுதேசிய மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,

ஒரு காலத்தில் பெண்கள் கடினமான பணிகளைச் செய்ய இயலாதவர்களாகக் கருதும் சமூகக் கருத்துக்களின் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைத்தார்.

மாற்றுத் திறனாளிகளை அனுதாபமாகக் கருதாமல்,  அறிவுச் செல்வம், திறமை, விருப்பம் மற்றும் நிபுணத்துவத்திற்கான அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்களாக அவர்கள் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அபரிமிதமான திறமைகளைக் கொண்ட நமது மாற்றுத்திறாளிகளுக்கு அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

டிஸ்லெக்ஸியா நோயால் பாதிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி உதாரணமாகக் குறிப்பிட்ட திரு தங்கர், குறைபாடுகள் குறித்த நமது பார்வை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் விஷயங்களைப் பொறுத்தது என்பதை எடுத்துக்காட்டினார்.

எவ்வாறாயினும், உண்மையான இயலாமை என்பது கண்களால் பார்ப்பதை விடவும் அதிகமானவற்றை உள்ளடக்கியது, என்றார். மேலும் மன, ஆன்மீக மற்றும் உணர்ச்சி சவால்களின் எல்லைகளுக்கு விரிவடைகிறது என்று கூறினார்.

அனைத்து வகையான குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, அதற்கு பொருத்தமான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பல்வேறு துறைகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் “அவர்களின் முன்னேற்றத்துக்கான தடைகள் தகர்க்கப்பட்டுள்ளன” என்றும் “மாற்றுத்திறனாளிகள்” என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் குறித்த கண்ணோட்டத்தில் இதேபோன்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

“அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல;  அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கருதுகிறோம், “என்று அவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படையாக உடல் திறன் கொண்டவர்களாகத் தோன்றுபவர்கள், கண்ணுக்குத் தெரிந்தோ அல்லது மறைக்கப்பட்டோ ஒருவித இயலாமையைக் கொண்டிருக்கலாம், யாரும் உண்மையில் முழுமையானவர்கள் அல்ல என்று அவர் விவரித்தார்.

“ஒருவரின் கட்டுப்பாட்டில் அல்லது செல்வாக்கின் கீழ் இருப்பது” என்ற சமீபத்திய போக்குக்கு எதிராக எச்சரித்தவர், அதிகாரமளிப்பதை விட சார்புநிலையை வளர்ப்பதற்கான ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினரிடையே அதிகாரமளிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர், சமூகத்தின் இந்த பிரிவுகளுக்கு அதிகாரமளிப்பதை நோக்கி முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் சமூக பொறுப்பு  நிதியை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வசுதைவ குடும்பகம் என்ற இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் ஜி-20 குறிக்கோள் இப்போது ஒரு கள யதார்த்தமாக உள்ளது என்பதை வலியுறுத்தியவர், இந்தியாவைப் பற்றிய உலகின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

தீர்வுகளுக்காக மேற்கத்திய நாடுகளை மட்டுமே நோக்குவதை விட்டு வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், இப்போது, மேற்கத்திய நாடுகள் இந்தியாவிடமிருந்து நுண்ணறிவுகளை எதிர்பார்க்கின்றன என்று குறிப்பிட்டார்.

இன்று உலக அரங்கில் இந்தியாவின் முக்கிய இடத்தை எடுத்துரைத்த அவர், “நாட்டின் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி உலகை வியக்க வைத்துள்ளது” என்று எடுத்துரைத்தார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதை பாராட்டியவர், அதன் முழுமையான விதிகள் குறித்து திருப்தி தெரிவித்தார். கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வசதிகளை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையைப் பாராட்டியவர், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த “சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கொண்டு புதுமையாக இருக்க வேண்டியதன்” முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். “ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும்”, என்று வலியுறுத்தினார்.

சர்தக் உலகளாவிய வள மையத்தில் உள்ள திறன் அருங்காட்சியகம் ‘சாத்தியக்கூறுகளின் அருங்காட்சியகம்’ ஆகியவற்றையும் குடியரசுத் துணைத்தலைவர் பார்வையிட்டார்.

Tags: Vice-President Jagdeep Dhankhar
Share
Tweet
SendShare
Previous Post

திருநெல்வேலியில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

வெளிநாடுகளில் 403 மாணவர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies