கிழக்கு மண்டல மாநில கவுன்சிலின் 26வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது.
பீகார் மாநிலம் பாட்னாவில் கிழக்கு மண்டல மாநில கவுன்சிலின் 26-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
அதேபோல், தலைமைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இருமாநில உறவுகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள்,எல்லைப்பிரச்சினை, வரி பகிர்வு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இடதுசாரி தீவிரவாதம், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.