உலக முதலீட்டாளர் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது.
27வது உலக முதலீட்டாளர் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெறும் மாநாட்டை தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு வசதி முகமை,இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் & எக்ஸ்போ சென்டர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக உலக முதலீட்டு மாநாடு நடைபெறுகிறது. 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 50 முதலீட்டு ஊக்குவிப்பு முகவர்கள் (IPAs) மற்றும் பல்வேறு பலதரப்பு முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கீழ், இது மிகப்பெரிய உலக முதலீட்டு மாநாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.
விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி, இன்டராக்டிவ் டச் ஸ்கிரீன்கள் மற்றும் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளில் இந்தியாவின் சிறந்த சலுகைகளை வெளிப்படுத்தும் அனுபவ இந்திய மையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.