உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இரு ஆண்டுகளில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
3000 சதுர அடி பரப்பளவில் இருந்த காசி விஸ்வநாதர் ஆலயம் கடந்த 2021ஆம் ஆண்டில் 5 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டது. இதனை 2021ஆம் டிசம்பர் 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கோவில் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் 50,000 முதல் 75,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில கோவில் நடை திறக்கப்பட்ட இரு ஆண்டுகளில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இது குறித்து கோவில் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது கோடை, குளிர், மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பக்தர்களை காக்க ஜெர்மன் ஹேங்கர், கால்கள் கருகாமல் இருக்க பாய்கள், குளிரூட்டிகள், சுத்தமான குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலிகள், அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவிலுக்குச் செல்வதற்கான பாதை எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.