தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்நிலையில், கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக 16 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்பொழுது உள்ள நிலவரப்படி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.