பிரதமர் மோடி தலைமையிலான அரசினால்தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கை சாத்தியமானது என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வானதி சீனிவாசன் தமது X பதிவில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
மதிப்பிற்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசினால் தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கை சாத்தியமானது.
ஜம்மு காஷ்மீரை தேசிய நீரோட்டத்துடன் இணைக்க எடுத்த முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. பாரத பிரதமருக்கு மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.