தமிழகத்தில் 1 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று நடைபெற்றது.
மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக, டிசம்பர் 11 -ம் தேதி அன்று, தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 6 முதல் 8 -ம் வகுப்புக்கு இன்று காலை 10 முதல் 12.30 மணி வரையிலும், 9 முதல் 10 -ம் வகுப்புக்கு மதியம் 2 முதல் 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற்றது.