பாஜக கூட்டணி 328 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 308-328 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ்-ETG ரிசர்ச் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி 540 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி சுமார் 308-328 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 52-72 இடங்களிலும், ஒய்எஸ்ஆர்சிபி 24-25 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 20-24 இடங்களிலும், பிஜேடி 13-15 இடங்களிலும், பிஆர்எஸ் 3-5 இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி 4-7, மற்றவை 66-76 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஹிந்தி பேசும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அக்கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. .
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 70-74 இடங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கூட்டணி 4-8 இடங்களைப் பெறும் என்றும், பிஎஸ்பி ஒரு இடத்தையும், மற்றவை 1-3 இடங்களைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில், பாஜக 24-25 இடங்களை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி பூஜ்யம் அல்லது ஒரு இடத்தை பெ.றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மத்தியில் 3-வது முறையாக நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 52-72 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும், 18 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இண்டி கூட்டணியால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.