தெலுங்கானாவில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் ‘சம்மக்கா, சரக்கா’ என்ற பழங்குடியின பெண் தெய்வங்களின் பெயரில் பழங்குடியினா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதுதொடர்பான மசோதா மக்களவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவிற்கு தற்போது மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக விவாத்தின் போது பேச்ய மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம்-2014இன்கீழ் தெலுங்கானாவுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததும் அனைத்து நடைமுறைகளும் தொடங்கும் என தெரிவித்தார்.