கோவை மற்றொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வானதி சீனிவாசன் தமது X பதிவில், கோவை மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என, 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது. தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காகத் தீவிரவாத வேலைகளைத் தொடர்வேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே 1998 -ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு, 2022 -ம் ஆண்டு நடைபெற்ற சிலிண்டர் குண்டு வெடிப்பு என பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கோவை மீண்டு வருவதற்குள் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கோவைக்குக் கொண்டுவரப்பட்ட 2,953 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் வெளியானது.
இந்த பதட்டம் தணிவதற்குள் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் கோவை மத்திய சிறைச்சாலையில் தீவிரவாத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். காலம் தாழ்த்தாமல் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீதான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும். அப்போதுதான் முழு உண்மை விரைவாக வெளிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என, 25 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளின் இலக்காக இருந்துவருகிறது. தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக தீவிரவாத வேலைகளை தொடர்வேன்… pic.twitter.com/qN10ZL277E
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 15, 2023