சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இரயில் தண்டாவளத்தில் இருந்து இரயில் உள்ள 4 சக்கரங்கள் கீழே இறங்கியது. இதனால், இரயில் மேலும் செல்ல முடியாமல் அப்படியே நிறுத்தப்பட்டது.
விபத்துக்குளான இரயில் பணிமனைக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக, அப்போது இரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, தடம் புரண்ட இரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.