பாஸ்போர்ட்கள் விண்ணப்பித்த 7 முதல் 10 நாட்களில் வழங்கப்படுவதாகவும், தட்கல் பாஸ்போர்ட்கள் ஒன்று முதல் 3 நாட்களில் வழங்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட்டுக்கான காத்திருப்பு காலம்’ குறித்து காங்கிரஸ் எம்பி ஜஸ்பிர் சிங் கில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அளித்துள்ளார்.
அதில், சாதாரண பாஸ்போர்ட்டுக்கான நிலையான செயலாக்க நேரம் விண்ணப்பித்த நாளிலிருந்து 30-45 நாட்கள் ஆகும். தட்கல் பாஸ்போர்ட்டுக்கான நிலையான செயலாக்க நேரம் போலீஸ் சரிபார்ப்பு இல்லாமல் ஒரு வேலை நாள் ஆகும்.
பாஸ்போர்ட்டுகளை சரியான நேரத்தில் அனுப்புவதில் போலீஸ் சரிபார்ப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் சராசரியாக 14 நாட்கள் போலீஸ் சரிபார்ப்பு நேரம் இருந்தாலும், அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘எம் பாஸ்போர்ட் போலீஸ்’ செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பஞ்சாபில் பாஸ்போர்ட் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக கில்லின் கேள்விக்கு mPassport போலீஸ் செயலி பஞ்சாபிலும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் (பிஎஸ்கே) மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் (பிஓபிஎஸ்கே) சனிக்கிழமைகளில் திறக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.