தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் நிறுவனமாகும்.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துடன், நாடு முழுவதும் உள்ள 28,000 காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றவாளிகளை விரைவில் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாட்டிலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடைபெறும் மெட்ரோ பாலிடன் நகரமாகச் சென்னை உள்ளதாக தெரிவித்துள்ளது.