நடுத்தர மக்கள் மற்றும் செல்வந்தர்கள் வரை தங்களது சேப்புப் பணத்தில், தங்க நகை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல, மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் மட்டுமே, திருமணம், காதுகுத்து உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு அதிக அளவு தங்கம் பயன்படுத்துகிறோம்.
இதனால், நகைக்கடையில் விற்பனை செய்யும் தங்க நகைகளுக்கு ஹால் மார்க் கட்டாயம் என அரசு உத்தரவிட்டது. இது ஒரு சில மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.இந்த நிலையில், தங்க நகை விற்பனையில் அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் கட்டாயம் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என விருதுநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் உள்ள 803 மாவட்டங்களில் 343 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோரிக்கை முக்கியமான கோரிக்கையாக இருப்பதால், வழக்கை விரிவான விசாரணைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் உத்தரவிட்டனர்.