விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நேற்றைய தினம், அதிமுக விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாவட்டப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவரும், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளிக் குழுமத்தின் தலைவருமான, அண்ணன் முரளி ரெட்டியார் அவர்களும், அவர்களது மகனும், தென் கோடிப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான சகோதரர் ராஜசேகர் அவர்களும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, பல்லாயிரக்கணக்கான தங்கள் ஆதரவாளர்களுடன் தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திண்டிவனத்தில் நடந்த விழாவில், தமிழக பாஜக
மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நேற்றைய தினம், அதிமுக விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாவட்டப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவரும், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளிக் குழுமத்தின் தலைவருமான, அண்ணன் திரு முரளி ரெட்டியார்… pic.twitter.com/ugoZ06oktT
— K.Annamalai (@annamalai_k) December 17, 2023
அண்ணன் திரு. முரளி ரெட்டியார் மற்றும் சகோதரர் ராஜசேகர் ஆகியோர் வருகை, தமிழக பாஜகவுக்கு பெரிதும் பலம் சேர்க்கும் என்பது உறுதி. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் நல்லாட்சி தொடர, அனைவரும் இணைந்து உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.