தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!
Jul 29, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவா் பதவியிலிருந்து முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, முடிவுகளும் அன்றையதினமே வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

குறிப்பாக, 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 163 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இது 3-ல் 2 பங்கு வெற்றியாகும். அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 66 இடங்களே கிடைத்தன. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த நிலையில், தற்போதைய படுதோல்வி அக்கட்சியை கடும் அதிர்ச்சியடையச் செய்தது.

இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரியை நியமிக்கப்படுவதாக கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருக்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதாவது, தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, கமல்நாத்திடம் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கமல்நாத்தும் டெல்லிக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே, அகில இந்தியத் தலைமை கமல்நாத்தை நீக்கிவிட்டு, ஜிது பட்வாரியை நியமித்திருக்கிறது.

எனினும், காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலத் தலைவராக கமல்நாத் ஆற்றிய பங்களிப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், சத்தீஸ்கா் மாநில காங்கிரஸ் தலைவராக தீபக் பாஜி தொடர்வதற்கு கார்கே ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத் தலைமை பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CongressMadya PradeshPresidentkamalnath
ShareTweetSendShare
Previous Post

பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

பாஜகவில் இணைந்த அதிமுக மூத்த நிர்வாகிகள்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies