பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த, தாவூத் இப்ராஹிம், விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 750-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் உலகளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பின் மூளையாக இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தலைக்கு ரூ. 25 இலட்சம் சன்மானம் அறிவித்தது.
சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்தார். இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தாவூத் இப்ராஹிம் குறித்து அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகும்.
இந்த நிலையில், தாவூத் இப்ராஹிம் அடையாளம் தெரியாத நபரால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.