ரோகித்துக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா: சுனில் கவாஸ்கர் கருத்து!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோகித்துக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா: சுனில் கவாஸ்கர் கருத்து!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு, பேட்டிங்கில் கொஞ்சம் குறைந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 டி20 கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013-இல் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றதிலிருந்து 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 5 கோப்பைகளை வென்று கொடுத்தார்.  குறுகிய காலத்திலேயே மும்பை அணியை வெற்றிகரமான அணியாக முன்னேற்றி இன்று இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இத்தகைய அனுபவமும், திறமையும் வாய்ந்த ரோகித் சர்மாவை அணி நிர்வாகம் கழற்றி விட்டதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு ரோகித் சர்மா சற்று ஓய்ந்து விட்டதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நாம் இதில் சரி, தவறுகளைப் பார்க்கக்கூடாது. ஆனால், இந்த முடிவு அணிக்கு நன்மை செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் குறைந்து விட்டது. இதற்கு முன்பெல்லாம் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அதிக ரன்களைக் குவிப்பார்.

ஆனால், சமீப காலமாக அவர் சரியாக செயல்பட்டாததால் கடந்த 2 வருடங்களாக மும்பை ஒன்பது, பத்தாவது இடத்தைப் பிடித்தது. கடந்த வருடம் இந்திய அணி போராடி பிளே ஆஃப் வரை மட்டுமே சென்றது. அந்த வகையில் ஆரம்பக் காலங்களில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மாவை தற்போதை ஐபிஎல் தொடர்களில் நம்மால் காண முடியவில்லை.

ஒருவேளை இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் தொடர்ச்சியாக விளையாடியதால் சற்று களைத்திருக்கலாம். மறுபுறம் குஜராத்துக்கு முதல் வருடம் கோப்பையை வென்ற பாண்டியா இரண்டாவது வருடம் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

Tags: ipl 2024Hardik replacing Rohit as MI captainSunil Gavaskar
Share
Tweet
SendShare
Previous Post

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கொலை? 

Next Post

காசியும், தமிழகமும் ஆக்கப்பூர்வமான பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன: பிரதமர் மோடி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies