தென் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதால், அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தமது X பக்கத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டத்தைச் சகோதர, சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவது எனது மனதை கவலையுறச் செய்கிறது.
கனமழை நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் படும் இன்னல்கள் என் மனதை பதபதைக்கச் செய்கிறது. விரைவில் நிலைமை சீரடைந்து இயல்பு நிலை திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டத்தைச் சகோதர,சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவது எனது மனதை கவலையுறச் செய்கிறது.
கனமழை நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தாங்கள் படும்…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 18, 2023