மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?
Jul 23, 2025, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?

ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களில் பேரழிவை சந்தித்திருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி பேரத்திற்காக டெல்லி செல்வதா? என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் பெய்த பெரும் மழையால் கிராமங்கள் கூட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2004 இறுதியில் ஏற்பட்ட சுனாமி போல, பெரு மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மழையில் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், கிராமச் சாலைகள் பலத்த சேதமடைந்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள், மற்ற மாவட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் நிலைமை என்ன என்பதை அறிய முடியாத அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற பேரழிவை தென் மாவட்டங்கள் இதுவரை சந்தித்திராத நிலையில், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். இதைவிட பொறுப்பற்றச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

மக்கள் துயரத்தில் இருக்கும்போது, அரசின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் களத்தில் இருக்க வேண்டும். முதலமைச்சரே நேரில் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்போது பணிகள் வேகமெடுக்கும். ஆனால், மக்கள் என்ன பாடு பட்டால் என்ன? எங்களுக்கு அரசியல்தான் முக்கியம். கூட்டணி பேச்சு, கூட்டணி பேரம் தான் முக்கியம் என வாரிசு, ஊழலில் திளைக்கும் இண்டி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பறந்து சென்று விட்டார். இது கடும் கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் ஸ்டாலின் உடனே சென்னை திரும்பி, பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மீட்பு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்கள், வீடுகள், உடைமைகளை இழந்தோர், மாடு, ஆடு, கோழிகள் என கால்நடைகளை இழந்தோர், பயிர்கள் சேதமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.

வெள்ள நிவாரணம் என்ற பெயரில் சென்னை மக்களை அலைக்கழிப்பது போல், அலைக்கழிக்காமல் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்கள் பாதிப்பு, ஆடு, மாடு, கோழிகள் இழப்புக்கு தனியாக நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக, சென்னை மக்களைப் போல அலைக்கழிக்காமல் தென் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: delhitamilnadu rainstalinbjp vanathi srinivasanstalin in delhi
ShareTweetSendShare
Previous Post

இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!

Next Post

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்… ரூ.24.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா!

Related News

திருவண்ணாமலை : லோடு இறக்க கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்திய ஆசிரியர்கள்!

மதுரை ஆதீனம் முன்ஜாமினை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு – அண்ணாமலை கண்டனம்!

கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies