ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்... ரூ.24.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்… ரூ.24.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா!

Murugesan M by Murugesan M
Dec 19, 2023, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயில் நடைபெற்றது. இதில் உலகக்கோப்பையில் ஜொலித்த வீரர்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இவர்களில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,116 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் தகுதியின் அடிப்படையில் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளார்கள்.

இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடுமையான போட்டிக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில் அதனை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க்.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில மணிநேரங்களுக்கு முன்பு பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியிருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஏலத்தின் 4வது செட்டில் இந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஸ்டார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது.

இறுதியில் கொல்கத்தா அணி நிர்வாகம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஸ்டார்க்கை கைப்பற்றியது. அதேநேரம் ஆஸியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கும், ஷிவம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி மேற்கிந்திய தீவு வீரர் அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சேத்தன் சக்கரியாவையும், கேஎஸ் பரத்தையும் கொல்கத்தா நிர்வாகம் தலா ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸை டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.

உலகக் கோப்பை தாக்கத்தை ஏற்படுத்திய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.1.8 கோடிக்கு வாங்கியது. அதேபோல் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி.

இதற்கு முன்பும் ஷர்துல் சென்னை அணிக்கு ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ.5 கோடி கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு இம்முறை ஏலத்தில் அதிக டிமாண்ட் இருந்தது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் தொடங்கி, ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது.

உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து வீரரான டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் ரூ.4.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

Tags: ipl cricketipl auctionipl 2024Australian player Mitchell Starc
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?

Next Post

அஸ்ஸாம் தன்னாட்சிக் கவுன்சிலுக்கு ஜனவரி 8-ல் தேர்தல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies