இந்திய கடலோர காவல்படை தென் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனது கப்பல்கள், விமானங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 200 பேரைக் காப்பாற்றியுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.
தென் தூத்துக்குடி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சிக்கித் தவிக்கும் உள்ளூர் மக்களுக்கு உதவுவதற்காக கடலோர காவல்படை ஆறு பேரிடர் நிவாரண குழுக்களை மீட்பு படகுகள் மற்றும் அத்தியாவசிய உதவிகளுடன் நிறுத்தியுள்ளது.
ஹெலிகாப்டரைத் தவிர, மதுரை விமான நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு டோர்னியர் மற்றும் இரண்டு ALH Mk -III கொண்ட கடலோரக் காவல்படையின் வான்படைகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவிகளை வழங்கி வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாநில அரசு வழங்கிய உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 5.5 டனுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை மூன்று ஹெலிகாப்டர்கள் எடுத்துச் சென்று வழங்கப்பட்டுள்ளது.