இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா 1 வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று இந்த தொடரின் மூன்றாவது போட்டி இன்று யூரோலக்ஸ் போலந்து பார்க்கில் நடைபெறவுள்ளது.
போலந்து பார்க் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். காரணம் இதுவரை அங்கு நடந்துள்ள போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே 60 சதவிகிதம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போலந்து பார்க் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுக்கும் சராசரி ஸ்கோர் 254 ஆக உள்ளது.
மேலும் இந்த அணியில் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகிய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் அசத்துகிறார்.
அதேபோல் இந்திய அணியின் பேட்டிங் என்பது ஏற்ற இறக்கமாகவே உள்ளது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த இலக்கை, அதிரடியாக ஆடி எட்டிப்பிடித்தது.
இருப்பினும் இரண்டாவது போட்டியில், கே. எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் தவிர மற்ற அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சொதப்பினர். இதனால் இன்றையப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும் இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய அணி 47% வெற்றி பெறும் என்றும் தென் ஆப்பிரிக்கா அணி 53% வெற்றி பெறும் என்றும் பதிவிட்டுள்ளது.