தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!
Mar 15, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல்நாள், மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து, கடந்த 4 தினங்களாக தெலங்கானாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற எம்.என்.ஆர். கல்வி அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “நல்ல கல்வி முன்னேற்றத்தின் கதவுகளைத் திறக்கிறது.

அதேபோல, நல்ல ஆரோக்கியம் ஒருவரை வாழ்க்கையில் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஆகவே, கிராம மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் நிறுவனங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவது அவசியம்.

உலகின் அறிவுப் பொருளாதாரத்தில் நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள தொழில்துறை, குறிப்பாக ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகம் முழுவதும் நாட்டின் நற்பெயருக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எம்.என்.ஆர். அறக்கட்டளை போன்ற கல்வி நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களின் கல்வி மேம்பாடு மற்றும் சுகாதார நலனுக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அனசுயா சிதக்கா மற்றும் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் எம்.என்.ராஜு, துணைத் தலைவர் ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Droupadi MurmuPresidentTelangana
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 78 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் :  மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies