கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருச்செந்தூரில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடு, வாசல்களை இழந்தனர். தங்குவதற்கு இடம் இல்லாமலும், அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சேவாபாரதி தென்தமிழ்நாடு அதிரயாக முடிவு செய்து களத்தில் இறங்கியது.
இதனையைடுத்து, தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அரிசி மூட்டை, மளிகைப் பொருட்கள், அரிசி, பிஸ்கட், கோதுமை மாவு மூட்டைகள், துணிமணிகள், காய்கறிகள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துகள் உள்ளிட்ட 21 அத்தியாவசிய பொருட்கள் மலைபோல் குவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அரிசி, பருப்பு, எண்ணெய், பிரட், பிஸ்கட், உடை, பாய், மருந்து, போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, சைபால், தீப்பெட்டி, பாத்திரங்கள், ப்ளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரை, பல்பொடி, சோப்பு மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியப் பொருட்கள் கொண்ட ஆயிரக்கணக்கான இலவச பொருட்கள் தொகுப்பு தயார் செய்யப்பட்டது.
பின்னர் மினிவேன், ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து, தூத்துக்குடி நகரம் மற்றும் ஒவ்வொரு கிராமம் கிராமமாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயபக்தியோடு வழங்கினர்.
குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏறாளமான மேற்பட்ட இடங்களில் மக்களுக்கு உதவும் வகையில் சேவா பாரதி சமூக சமையல் கூடங்களைத் தொடங்கியுள்ளது.
இரவு -பகலாக அங்கு சமையல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மணிக்கு ஒரு தரும், அப்படியே சுடச்சுட உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உயிர் காக்கும் சேவை பணியில் உதவி செய்த, நன்கொடையாளர்கள், மற்றும் பணியாற்றிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம், மேலும் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப வாழ்த்துவோம் என சேவா பாரதி தொண்டர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
ஏழை எளிய மக்கள் கேட்காமலே, அவர்களுக்கு என்ன தேவை என்பது உணர்ந்து, வீடுதேடிக் கொண்டு வந்து தூய அன்புடன் அள்ளிக் கொடுத்து வரும் சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.