தமது கணவரின் மறைவுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமையை, மருது பாண்டியர்கள் துணையோடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டுக் காப்பாற்றியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் எனத் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்கள் நினைவு தினம் இன்று. பல மொழிகள் கற்றவர்.
ஆயுதப் பயிற்சி பெற்றவர். தமது கணவரின் மறைவுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமையை, மருது பாண்டியர்கள் துணையோடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டுக் காப்பாற்றியவர்.
பாரத நாடு, பெண்ணுரிமையையும், சமத்துவத்தையும் மதிக்கும் கலாச்சாரத்தைக் கொண்டது என்பது ராணி வேலு நாச்சியார் வாழ்விலிருந்து அறியலாம். அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.