பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!
Aug 20, 2025, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்து பெண்ணான டாக்டர் சவீரா பிரகாஷ் போட்டியிடுகிறார்.

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் நிறைவடையவிருந்தது.

ஆனால், 3 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 9-ம் தேதியே ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். இதையடுத்து, வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 10 தொகுதிகளில் பிற மதத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பனெர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

பொதுத் தொகுதிகளில் 5 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பிகே 25 என்ற பொதுத் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட சவீரா பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

சவீரா கடந்த 2022-ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றவர். தனது படிப்பை முடித்த கையோடு அரசியல் களத்தில் நுழைந்திருக்கிறார். சவீராவின் தந்தை ஓம் பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவரும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சவீரா கூறுகையில், “பாகிஸ்தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்பதே முதல் முன்னுரிமை. எனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ElectionHindu ladypakistanParliament
ShareTweetSendShare
Previous Post

ஜானகி நூற்றாண்டு விழா… அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்: புருவம் உயர்த்தும் அரசியல் புள்ளிகள்!

Next Post

இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !

Related News

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies