மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய நிலையில், எங்களது நண்பர் பிரதமர் மோடியை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் புடின்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். அப்போது, ரஷ்ய அதிபர் புடின், “எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷ்யாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்று ஜெய்சங்கரிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், “பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள்” என்று தெரிவித்தார்.