ஜனவரி 2-ம் தேதியான நாளை நடக்க உள்ள ஒரு வழக்கு, திமுக அமைச்சர்கள் சிலரை நடுக்கத்தில் தள்ளியுள்ளது.
திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் எம்எல்ஏ, எம்பிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தினார்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு, வழக்கமான சுழற்சி முறை பணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில், நீதிபதி ஜெயசந்திரன் வழக்கு விசாரணை நடத்தி வந்தார்.
தற்போது, மதுரை கிளையில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை, ஜனவரி 2-ம் தேதி முதல் விசாரணை நடத்த உள்ளார்.
இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நாளை ஜனவரி 2-ம் தேதி ,பட்டியலிடப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுக அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.