பிரதமர் மோடி இன்று திருச்சி வரும் நிலையில், தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாஸ் க்ளீனப் திருச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் பங்கேற்ற ஸ்வச் பாரத் பிரச்சாரம் இயக்கம் திருச்சியில் நடைபெற்றது.
அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு எம்எல்ஏவும், இந்தியா மகிளா மோர்ச்சா தலைவருமான ஸ்ரீமதி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் திருச்சி முழுவதும் வெகுஜன தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
5 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இன்று திருச்சி முழுவதும் 75 மண்டலங்களில் இந்த இயக்கத்தில் பங்கேற்கிறார்கள். இந்த தூய்மை இந்தியா இயக்கம் திருச்சியின் ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசையை மேம்படுத்தும் என்று நம்புகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.