ஜம்மு – காஷ்மீரில் இன்று 11.33 மணிக்கு 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்முவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 5 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்முவின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர்.
இதற்கிடையே, லடாக்கில் நேற்று இரவு 10.15 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது.