எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை : பிரதமர் மோடி
Oct 8, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 01:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய  முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று  திறந்து வைத்தார். ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் அவர் தொடங்கியும் வைத்தார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி   சிறப்புரையாற்றினார்.

எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு  நல்வாழ்த்துகள் என தமிழில் உரையை தொடங்கினார். நடிகர் விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். அவர் சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே  முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக, தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துன்பத்தை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உளளது. ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும்.  தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் மோடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தியை  எனக்குள் நிரப்பி செல்கிறேன். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாராத்தை நான் கற்று கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் மோடி கூறினார்.

5 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்.  வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி தான். பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தான் திருவள்ளுவர் உள்ளிட்டோர் சிறப்பான இலக்கியங்களை படைத்துள்ளார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய  விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Tags: trichy airporttrichy airport terminaltrichy functionModiRNRAVItrichy
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : இந்தியா பந்துவீச்சு!

Next Post

ரஜினிக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்!

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies