சாகர் பரிக்ரமா 10-ம் கட்ட யாத்திரையையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் ஏனாம் கடற்கறை கிராமத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் மீனவ பயனாளிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது.
நாட்டின் 75-வது விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் உணர்வாக அனைத்து மீனவர்கள், மீன் விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு பயனுள்ள திட்டமே சாகர் பரிக்ரமா திட்டம். இது ஒரு மத்திய அரசின் திட்டமாகும்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தமது எக்ஸ் பதிவில்,
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் மீனவ மக்களுக்கான வளர்ச்சித் திட்டமான “#SagarParikrama ” பத்தாம் கட்ட யாத்திரையை, புதுச்சேரி மாநிலத்தில் ஏனாம் கடற்கறை கிராமத்தில் மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் திரு.@PRupala அவர்களுடன் இணைந்து, மீனவ சகோதர, சகோதரிகளுக்கு… pic.twitter.com/FspyeyZY5o
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 3, 2024
பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடிஜி அவர்களின் மீனவ மக்களுக்கான வளர்ச்சித் திட்டமான சாகர் பரிமலா பத்தாம் கட்ட யாத்திரையை, புதுச்சேரி மாநிலத்தில் ஏனாம் கடற்கறை கிராமத்தில் மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் திரு. ரூபா அவர்களுடன் இணைந்து, மீனவ சகோதர, சகோதரிகளுக்கு பாரத பிரதமர் மீனவ மக்களுக்காக கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தேன். மேலும் ரூ.2.90 கோடி மதிப்பில் மீனவ பயனாளிகளுக்கு #PMMSY திட்டத்தின் கீழ் காசோலை வழங்கினோம்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் மீனவ பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டை #Kcc வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.