ஐசிசி-யின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டிருந்தது.
தற்போது 2023 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, இந்திய அணி பேட்ஸ்மேன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் , இலங்கை அணி பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா மற்றும் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் 2023 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வங்காளதேச வீராங்கனை மருஃபா அக்டர் , இங்கிலாந்து அணி வீராங்கனை லாரன் பெல், ஸ்காட்லாந்து வீராங்கானை டார்சி கார்ட்டர் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.