கடந்த 2022 – 2023 ஆம் நிதியாண்டில் பொம்மை ஏற்றுமதி 239 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பொம்மை தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-15 நிதியாண்டை ஒப்பிடுகையில், 2022-23-ல் பொம்மைகளின் இறக்குமதி 52 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி 239 சதவீதம் அதிகரித்துள்ளது சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் மிகவும் தரமானதாக உள்ளது.
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் கோரிக்கையின் பேரில், லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளின் வெற்றிக் கதை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்படி, கடந்த 2014 முதல் 2020 வரையிலான 6 ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால், பொம்மை உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் 33 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்தது. மேலும், பொம்மை விற்பனையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தை எட்டியுள்ளது.
பொம்மை தொழிலுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, மத்திய அரசு உருவாக்கி ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வரி சலுகைகள் அளிக்கப்படுகிறது.
பொம்மை உற்பத்தி துறையில் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு மாற்றாக இந்தியா உருவாக்கி உள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது மன் கி பாத் உரையின் போது, இந்தியாவை உலகளாவிய பொம்மை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இந்த தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, பொம்மைகளை வடிவமைத்தல், பொம்மைகளின் தரத்தை கண்காணித்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றை மேம்படுத்த பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (NAPT) போன்ற விரிவான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.