ராம ஜென்மபூமி வழக்கில் முஸ்லீம் மனுதாரருக்கு அழைப்பிதழ்!
Jul 29, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராம ஜென்மபூமி வழக்கில் முஸ்லீம் மனுதாரருக்கு அழைப்பிதழ்!

அயோத்தி மத முக்கியத்துவம் வாய்ந்த நல்லிணக்க  பூமி என புகழாரம்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முஸ்லீம்  மனுதாரருக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 7000 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு  கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ராமர் பாதைக்கு அருகில் உள்ள கோட்டியா பன்ஜிடோலாவில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் அமைவது மகிழ்ச்சி அளிப்பதாக இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இஸ்லாமியர்கள் மதிக்கின்றனர். எங்கும் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கவில்லை.

அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அயோத்தி இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த நல்லிணக்க  பூமி என அவர் தெரிவித்தார். பிரதமர் தரிசனத்திற்காக (புனிதப் பயணம்) அயோத்திக்கு வருவது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி விமான நிலைய திறப்பு விழாவுக்காக அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு இக்பால் அன்சாரி மலர் தூவி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Ayodhya case litigant Iqbal AnsariRamjanmabhoomi-Babri Masjid casePM Modiayodhya ramar templeRam Mandir consecration ceremonyAyodhya case
ShareTweetSendShare
Previous Post

பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!

Next Post

தென் மாவட்டங்களில் மீண்டும் மழை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies